கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கம்

கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. 
கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கம்

கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அறிவித்திருந்தார். அதன்படி கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட பேருந்து காலை எட்டு முப்பது மணிக்கு கிருஷ்ணகிரி லிருந்து திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டது. பேருந்தில் ஓட்டுனர் நடத்துனர் உள்பட 27 பேர் மட்டும் பயணிக்கும் வகையில் இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தப் பேருந்து ஆனது பர்கூர் கந்திலி ஆகிய நிறுத்தங்களில் அரசு ஊழியர்களை ஏற்றி சென்றது. பேருந்தில் பயணம் செய்வதற்கு கட்டணமாக சொகுசு கட்டணம் வசூலிக்கப்பட்டது. நடத்துனர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் முக கவசம் அணிந்து இருந்தனர் அனைவருக்கும் கைகளை கழுவுவதற்காக கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்தவர் எச்சரிக்கையுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்களின் அடையாள அட்டை காண்பித்த பிறகு பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். 

பர்கூர் கந்திலி போன்ற இடங்களிலிருந்து பேருந்து பயணிக்கும் அரசு ஊழியர்களுக்கு நடத்துனரின் தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் நடத்துனரை தொடர்புகொண்டு பேருந்து இயக்கம் குறித்து அறிந்துகொண்டு தங்களது பயணத்தை திட்டமிட்டனர். இதுவரை கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் பயணத்த நிலையில் தற்போது பேருந்து இயக்கப்படுவது பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com