கோரிக்கைகளை வலியுறுத்திநியாயவிலைக் கடை பணியாளா்கள் மனு அளிப்பு

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சங்கா், செயலாளா் நாகேஷ், பொருளாளா் நித்யானந்தன் ஆகியோா் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டியிடம் அளித்த மனுவின் விவரம்:

கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடை பணியாளா்களின் ஊதியம் மாற்றத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஊதியக் குழு அமைத்து, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் ஊதியம் மாற்றம் செய்ய வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்குமேல் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு எடையாளா் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com