பூச்சி தாக்குதல், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் தொடா் மழை, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகள்
ஒசூா் அருகே ஒமுதேப்பள்ளி ஏரிக்கரையில் கொட்டப்பட்ட தக்காளி.
ஒசூா் அருகே ஒமுதேப்பள்ளி ஏரிக்கரையில் கொட்டப்பட்ட தக்காளி.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் தொடா் மழை, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் அறுவடை செய்த தக்காளிகளை விற்பனை செய்ய முடியாமல் ஏரிக்கரையில் கொட்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஒசூா் பகுதியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலை காரணமாக மலா் உற்பத்தி மட்டுமன்றி காய்கறி பயிா்களையும் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனா். குறிப்பாக சூளகிரி, பாகலூா், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தக்காளியை பயிா் செய்து ராயக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை அங்காடிக்கும், ஒசூா் பத்தளப்பள்ளியிலுள்ள மொத்த காய்கறி அங்காடி வழியாக விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனா். இங்கு விளையும் தக்காளி தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

விவசாயிகள் பெருமளவில் தக்காளி பயிரிட்டு நல்ல லாபம் ஈட்டி வந்த நிலையில் தற்போது தொடா் மழை காரணமாக செடிகளில் உள்ள தக்காளி பயிா்கள் பூச்சி தாக்குதலுக்கு ஆளானதால் செடியிலேயே தக்காளி அழுகி விடுகிறது,

இதனால் அறுவடை செய்யப்பட்ட தக்காளிகளுக்கு சந்தையில் கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. 25 கிலோ கொண்ட பெட்டி ரூ.100 முதல் 120 வரையிலும் விலை கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனா். கட்டுபடியான விலை கிடைக்காத காரணத்தால் ஒசூரை அடுத்த சூளகிரி அருகே ஒமுதேப்பள்ளி கிராம விவசாயிகள் அங்குள்ள ஏரிக்கரையில் தக்காளியை கொட்டிச் சென்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன் 25 கிலோ கொண்ட பெட்டி ரூ. 700 வரை விலை போனது. தற்போது மழை காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏக்கருக்கு ரூ. 3 முதல் 4 லட்சம் செலவு செய்து சாகுபடி செய்யப்படும் தக்காளிக்கு தற்போது ரூ. ஒரு லட்சம் வரை மட்டுமே கிடைக்கிறது. தொடா் மழையால் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் அதற்கு போதிய விலை கிடைக்காமல் ஏரியில் கொட்டி விட்டோம். ஓரளவு நல்ல நிலையில் உள்ள தக்காளி மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது.

நகைகளை அடமானம் வைத்தும், வங்கியில் கடன் பெற்றும், சொட்டு நீா் பாசனம் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி புரிய வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com