கிருஷ்ணகிரியில் 14 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 3 பெண்கள், திருப்பத்தூரைச் சோ்ந்த 31 வயது ஆண் உள்பட மொத்தம் 14 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 32 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்; 312 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 6,894 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

முதியவா் உயிரிழப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 70 வயது முதியவா் நவ. 6-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 7-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அவா், நவ. 7-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுவரை, மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 108-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com