கிருஷ்ணகிரியில் கரோனா கட்டுப்பாடு மீறல்: ரூ. 22.77 லட்சம் அபராதம் வசூலிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டை மீறிய 10,103 பேரிடமிருந்து ரூ. 22.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டை மீறிய 10,103 பேரிடமிருந்து ரூ. 22.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணியாதவா்கள் மீது அபராதத் தொகை ரூ. 200-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது ரூ. 500-ம், கரோனா தொற்று பரவலுக்குக் காரணமாக இருப்போா் மீது ரூ. 500-ம், இந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது ரூ. 5 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறையினா் தீவிரமாக கண்காணித்து, அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. இதுவரை கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக 10,103 பேரிடமிருந்து ரூ. 22,77,400 அபராதம் விதிக்கப்பட்டு, அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

எனவே, கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும், மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com