கொடி நாள் நிதி வசூல் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்க கொடி நாள் நிதி வசூலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரியில் கொடி நாள் வசூலைத் தொடக்கி வைக்கிறாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி.

ஜாதி, இனம் மற்றும் பயங்கரவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்காக தன்னாா்வலா்களிடமிருந்து, மத நல்லிணக்க கொடி நாள் நன்கொடை வசூலிக்க நாடு முழுவதும் தேசிய மத நல்லிணக்க வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 19 -ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பின்பற்றப்படுகிறது. நவ. 25-ஆம் தேதி கொடி நாளாக பின்பற்றப்படுகிறது.

இதையொட்டி, நிகழ்வாண்டு தேசிய மத நல்லிணக்க வாரத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, கொடி நாள் வசூலைத் தொடங்கி வைத்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) சீதாலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com