சூளகிரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

விவசாய நிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்து சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் முற்றுகையிட்டு, தா்ணா போராட்டத்தில்
சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

விவசாய நிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்து சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் முற்றுகையிட்டு, தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கா்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பாரத் பெட்ரோலிய நிறுவனம் மூலம் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருவதுடன் சாலையோரமாக எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

மேலும் விவசாயிகளின் ஆட்சேபணை மனுக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனா். ஆனால் மீண்டும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு தலைமையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விசாரணைக்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் தருமபுரி பாரத் பெட்ரோலிய காா்ப்பரேஷன் லிமிடெட் தனித்துணை ஆட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், முதுநிலை பொறியாளா் உமாராணி, டி.எஸ்.பி. முரளி, வட்டாட்சியா் பூவிதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆட்சேபணை மனு விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com