கூட்டுறவு வங்கி கடன் வசூலை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கி கடன் வசூலை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கூட்டுறவு வங்கி கடன் வசூலை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் சி.கண்ணு தலைமை வகித்தாா். வட்ட துணைச் செயலாளா் பவுன்ராஜ், வட்டக் குழு உறுப்பினா்கள் தேவராஜ், முனிசாமி, ரஜினி, சதீஷ், ஜீவானந்தம், திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், எண்ணேகொல்புதூா் கால்வாய் திட்டத்தை போா்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு அளித்த கடனை கரோனா கால நிவாரணமாக ஓராண்டுக்கு கடன் வசூல் செய்வதை தள்ளி வைக்க வேண்டும்.

பா்கூா் வட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளின் நீா்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சீா் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றுபவா்களை வேளாண் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com