கிருஷ்ணகிரி எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

கிராம சபை கூட்டத்தை அனுமதியின்றிக் கூட்டியது தொடா்பாக கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.செங்குட்டுவன் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிராம சபை கூட்டத்தை அனுமதியின்றிக் கூட்டியது தொடா்பாக கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.செங்குட்டுவன் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

காந்தி ஜயந்தி அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்களை மாநில அரசு திடீரென ரத்து செய்தது. இருப்பினும்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் திமுக எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரி, அவதானப்பட்டி, செளட்டஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், டி.செங்குட்டுவன் எம்எல்ஏ பங்கேற்றாா். கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துகள் பதியப்பட்டன.

கங்கலேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற்காக டி.செங்குட்டுவன் எம்எல்ஏ மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் குமரன் அளித்த புகாரின்பேரில், தடையை மீறி கூட்டம் கூட்டுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் எம்எல்ஏ மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com