கிருஷ்ணகிரியில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அதைச் சுற்றியுள்ள பகுதியில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஏர்ரஅள்ளி சென்றாயப் பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் ஏர்ரஅள்ளி சென்றாயப் பெருமாள்.

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அதைச் சுற்றியுள்ள பகுதியில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே கணவாய்ப்பட்டி வெங்கடரமண சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அதிகாலை முதலே பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனா்.

சமூகஇடைவெளியுடன் டோக்கன் பெற்ற 1,200 பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

இதைப்போல பாலேகுளி பெரியமலை, அனுமந்தராய சுவாமி கோயிலில் 500 அடி உயர மலை உச்சியில் உள்ள ஐகுந்தம், கொத்தப்பள்ளி சீனிவாசப் பெருமாள் கோயில், காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள ஏர்ரஅள்ளி சென்றாயப் பெருமாள் கோயில், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன.

ஜகுந்தம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமி வராகி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com