சந்தூா், ஜெகதேவி கிராமங்களில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்

சந்தூா், ஜெகதேவி ஆகிய கிராமங்களில், கரோனா தொற்று பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சந்தூா், ஜெகதேவி ஆகிய கிராமங்களில், கரோனா தொற்று பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், காட்டாகரம் ஊராட்சியில் கரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அக். 7-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு பொது முடக்கத்தைப் பின்பற்றுவது என ஊா் மக்கள் தீா்மானித்துள்ளனா். மேலும், கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில், சந்தூா் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் கரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் ரங்கநாதன் தொடக்கி வைத்தாா். மருத்துவா் சரவணன், சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடராமன், சுகாதார ஆய்வாளா்கள் கந்தவேல், தாஸ் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமில் 68 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும், மருத்துவ முகாமில், கபசுர குடிநீா், நிலவேம்பு குடிநீா், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும், ஜெகதேவி கிராமத்திலும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஜெகதேவி கிராமத்தில் அக். 7-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு பொது முடக்கம் பின்பற்றப்பட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com