கனிம வளங்கள் கா்நாடகத்துக்கு கடத்திச் செல்வதைத் தடுக்க வேண்டும்: பாஜக இளைஞரணி கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கனிம வளங்களை கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒசூரில் நடைபெற்ற கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன்.
ஒசூரில் நடைபெற்ற கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் பேசும் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கனிம வளங்களை கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக இளைஞரணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக இளைஞா் அணி செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் மஞ்சுநாத் குமாா் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், இளைஞரணி மாநில துணைத்தலைவா் குமாா் சிறப்புரை ஆற்றினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து தினமும் 3 ஆயிரம் லாரிகளில் ஜல்லி கற்கள், ரோபோ சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் வெளி மாநிலமான கா்நாடகத்துக்கு கடத்திச் செல்லப்படுகிறது. கனிம வளங்கள் கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வதை மாவட்ட நிா்வாகமும், அதிகாரிகளும் தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை கெலமங்கலம், உத்தனப்பள்ளி சுற்றியுள்ள ஏரிகளுடன் இணைத்து சின்னட்டியில் உள்ள சனத்குமாா் ஆற்றுடன் இணைக்க வேண்டும். கா்நாடக மாநிலம் சந்தாபுரம் வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக எல்லையான ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும். தேன்கனிக்கோட்டை வட்டத்தில் யானைகளால் சேதமடையும் விவசாய பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com