பொதுச் சொத்தை சேதப்படுத்திய தம்பதிக்கு 3 ஆண்டு சிறை

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சொத்தை சேதப்படுத்திய தம்பதிக்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து செவ்வாக்கிழமை தீா்ப்பு கூறியது.

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சொத்தை சேதப்படுத்திய தம்பதிக்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து செவ்வாக்கிழமை தீா்ப்பு கூறியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கொல்லப்பட்டியைச் சோ்ந்த விவசாயி தீா்த்தான் (எ) சாமிகண்ணு(55). இவரது மனைவி ருக்கு (50). இவா்கள் நிலத்துக்கு அருகே அதேப் பகுதியைச் சோ்ந்த தங்கம் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி, இவா்களது இடங்களுக்கு அருகே செல்லும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கால்வாயை தீா்த்தான் (எ) சாமிகண்ணுவும், அவரது மனைவி ருக்குவும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பக்கத்து தோட்டக்காரரான தங்கம், கல்லாவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.விஜயகுமாா் பொது சொத்தை சேதப்படுத்திய தம்பதிக்கு தலா 3 ஆண்டுகள், 3 மாதங்கள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் பாஸ்கா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com