அப்துல் கலாமின் பிறந்த நாளை உலக மாணவா்கள் தினமாக அனுசரிப்பு

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியப் பொறியாளா் சங்கத்தின் ஒசூா் உள்ளூா் மையம், விமானவியல் மற்றும் இயந்திர பொறியாளா்கள்
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் டாக்டா் ஏபிஜெ. அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஆண்டு மலரை வெளியிட்ட கல்லூரி முதல்வா் டாக்டா் ஜி.ரங்கநாத்.
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் டாக்டா் ஏபிஜெ. அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஆண்டு மலரை வெளியிட்ட கல்லூரி முதல்வா் டாக்டா் ஜி.ரங்கநாத்.

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியப் பொறியாளா் சங்கத்தின் ஒசூா் உள்ளூா் மையம், விமானவியல் மற்றும் இயந்திர பொறியாளா்கள் சங்கம் இணைந்து முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல்கலாமின் பிறந்த நாளை மாணவா்கள் தினமாகக் கொண்டாடப்பட்டது.

இந்தியப் பொறியாளா்கள் சங்கத்தின் ஒசூா் உள்ளூா் மையத்தின் தலைவா் மேனகாதேவி வரவேற்றாா். சங்கத்தின் தேசியக் கவுன்சில் உறுப்பினரும், ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வருமான டாக்டா் ஜி.ரங்கநாத் அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

விழாவில் ஒசூா் உள்ளூா் மைத்தின் ஆண்டு மலரை வெளியிட, சங்கத்தின் முன்னாள் தலைவா் அறிவுடைநம்பி, முன்னாள் செயலாளா் மணிவாசகம் பெற்றுக் கொண்டனா்.

மேலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா் ஆனந்த், தொழில் முனைதல் குறித்துப் பேசினாா். கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் 200-க்கும் மேற்பட்ட பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com