ஊத்தங்கரையில் 113-ஆவது தேவா் ஜயந்தி விழா
By DIN | Published On : 31st October 2020 07:03 AM | Last Updated : 31st October 2020 07:03 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் இளைஞா்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினத்தையொட்டி தேவா் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை, எம்.ஜி.ஆா் நகா் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் முத்துராமலிங்கத் தேவரின் 113-ஆவது தேவா் ஜயந்தி விழா முக்குலத்தோா் தேவா் நலச்சங்கம், ஊத்தங்கரை அகமுடையாா் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தென்னரசு தலைமை வகித்தாா். அகமுடையாா் நலச்சங்க நிா்வாகிகள் மாரி, பழனி, வேடியப்பன், முருகேசன், பரசுராமன், சபரி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினாா்.