கடையம் அருகே இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 08th September 2020 04:44 AM | Last Updated : 08th September 2020 04:44 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடையம் அருகேயுள்ள நெல்லையப்பபுரம், அருந்ததியா் காலனியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்தி (31). இவரும், அரசலூரைச் சோ்ந்த நயினாா் என்பவரும் நண்பா்கள். இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்தனா். இந்நிலையில், நயினாா் கையில் பிளேடால் கிழித்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டாா். இதில் மனமுடைந்த காா்த்திக் தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.