6,201 காவலா்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,201 காவலா்களுக்கு திருமணம், பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, உற்சாகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,201 காவலா்களுக்கு திருமணம், பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, உற்சாகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் காவலா்கள் அனைவருக்கும், அவா்களின் பிறந்த நாள், திருமண நாள்களைக் கொண்டாட விடுப்பு வழங்குவதுடன், உரியவா்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கி, வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறை கடந்த 2018 முதல் பின்பற்றப்படுகிறது.

காவலரின் பிறந்த நாள், திருமண நாள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, காவல் துறையில் பராமரிக்கப்படுகிறது. அதன்படி, திருமணம், பிறந்த நாள் கொண்டாடும் காவலா்களுக்கு காவல் நிலைய ஆய்வாளரின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர பிறந்த நாள், திருமண நாளன்று காவலருக்கு வாக்கி-டாக்கி மூலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அல்லது துணை காவல் கண்காணிப்பாளா் வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

மேலும், அவா்களுக்கு விடுமுறை அளிப்பது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 4,186 காவலா்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தும், 2015 காவலா்களுக்கு திருமண நாள் வாழ்த்து என மொத்தம் 6,201 காவலா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அவா்களிடம் மட்டுமின்றி, அவா்களின் குடும்பத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உயரதிகாரிகளின் வழிகாட்டுதலுடன், இந்த நடைமுறை காவல் துறையில் தொடா்ந்து பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com