முள்ளுவாடி ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

பென்னாகரம், முள்ளுவாடி ஏரிக்குச் செல்லும் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம், முள்ளுவாடி ஏரிக்குச் செல்லும் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே நான்கு சாலை சந்திப்பு பகுதி, செக்குமேடு, போயா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பத்தினா் வசித்து வந்தனா். இவா்கள், அப்பகுதிகளில் தங்களுக்கு சொந்தமான மற்றும் குத்தகைக்கு நிலத்தை பெற்று விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

போடூா், போயா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீரானது நீரோடை வழியாக மூட்டைகார தெரு வழியாக முள்ளுவாடி ஏரிக்கு செல்கிறது. தற்போது, இந்த நீரோடையை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக மழை வெள்ளம் செல்வதற்கு போதிய கால்வாய் வசதி இல்லாமல் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தன.

போடூா் பகுதியில் இருந்து முள்ளுவாடி ஏரிக்குச் செல்லும் நீரோடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை நீா் முழுவதும் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com