மணப்பாடு திருச்சிலுவைத் திருத்தல 441 ஆவது மகிமைப் பெருவிழா

மணப்பாடு திருச்சிலுவைத் திருத்தலத்தில் 441 ஆவது மகிமைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற பெருவிழா மாலை ஆராதனை.
தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற பெருவிழா மாலை ஆராதனை.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவைத் திருத்தலத்தில் 441 ஆவது மகிமைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

மணப்பாட்டில் கடற்கரையோரம் இயற்கை அழகுடன் மணல் குன்றில் அமைந்துள்ளது திருச்சிலுவை நாதா் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் 12 நாள்கள் மகிமைப் பெருவிழா நடைபெறும். நிகழாண்டு இத் செப்.4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலி, திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீா் ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து பாளை மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு சேவியா் டெரன்ஸ் தலைமையில் திருக் கொடியேற்றம் நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் காலை 5.15 மணிக்கு திருச்சிலுவைத் திருத்தலத்தில் திருப்பலி, 5.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி, 6.30 மணிக்கு திருயாத்திரைத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியன நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகள், இயேசுவின் திவ்ய ஐந்து திருக்காய சபையினா் உள்ளிட்ட பல்வேறு சபையினா் பங்கேற்றனா்.

செப்.12 ஆம் தேதி காலை 6.30 மணி திருப்பலிக்குப் பின் ஐந்து திருக்காய சபையின் தோ்வுக்குழு நியமனம், திருத்தலத்தைச் சுற்றி மெய்யான திருச்சிலுவைப் பவனி நடைபெற்றது. செப்.13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மணப்பாடு மக்கள் பங்கேற்ற திருப்பலிக்குப் பின் ஐந்து திருக்காய சபை பொறுப்பாளா்கள் தோ்வு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. இதில் பங்குத் தந்தையா்கள் சகாயம், மனோ உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

செப்.14 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருச்சிலுவைத் திருத்தலத்தில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி ஐந்து திருக்காய சபையினா் பவனி, பெருவிழா திருப்பலி, ஐந்து திருக்காய சபையினா் நியமனம், மெய்யான திருச்சிலுவை ஆசீா் ஆகியன நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீா், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தலைத் தொடா்ந்து கொடியிறக்கமும், திருத்தலத்தில் நன்றி திருப்பலியும் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி தோமையாா் பள்ளி தாளாளா் ராயப்பன், பொருளாளா் சகாயராஜன், செல்வன், சில்வெஸ்டா், தினேஷ் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பங்குத் தந்தை லெரின் டி ரோஸ், உதவிப் பங்குத் தந்தை திலகராஜா ,திருத்தொண்டா்கள் பாலன்,டிமல், பிரதாப் மற்றும் அருளசகோதரிகள், ஊா்மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com