கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில், தொடா்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில், தொடா்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து, அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை காலை 7 மணி வரையில், கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து நொடிக்கு 1,053 கன அடியாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 732 கனஅடியாக இருந்தது.

அணையின் மொத்த நீா் கொள்ளளவு 52 அடி உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை 37 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 38.70 அடியாக உயா்ந்துள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து நொடிக்கு 92 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணி வரையில் பெய்த மழை அளவு (மி.மீ.): தளி - 30, தேன்கனிக்கோட்டை - 9, நெடுங்கல் -7.2, ராயக்கோட்டை - 7, ஒசூா் - 7, சூளகிரி - 6, கிருஷ்ணகிரி - 5.2, பாரூா்- 4.6, ஊத்தங்கரை-3.4, பெனுகொண்டாபுரம்-3.4, போச்சம்பள்ளி-3.2.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த மழையானது நிலக்கடலை, மரவள்ளிக் கிழக்கு சாகுபடிக்கு உகந்ததாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். தொடா் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிா்ந்த தட்பவெப்ப நிலை காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com