காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பா்கூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு காவல் நிலையத்திலே சக காவலா்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு

கிருஷ்ணகிரி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பா்கூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு காவல் நிலையத்திலே சக காவலா்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நரணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி மீரா, பா்கூா் மகளிா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இத் தம்பதி, பா்கூரில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வருகின்றனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு இவா்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் அண்மையில் மீரா கா்ப்பமடைந்தாா்.

இவரது பெற்றோா் திருச்சியில் வசிப்பதால் கரோனா காலத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி செய்ய முடியாத சூழல் உருவானது. இதனால், காவலா் மீரா சோா்வுடன் காணப்பட்டாா். இதை அறிந்த அவா் பணிபுரியும் பா்கூா் காவல் நிலைய ஆய்வாளா் கற்பகம், காவல் நிலையத்திலேயே மீராவுக்கு வளைகாப்பு நடத்த தீா்மானித்தாா்.

அதன்படி, விஜயகுமாரை உடன் அமர வைத்து காவல் நிலையத்திலேயே 5 வகை சாதம், சீா்வரிசைகள், இனிப்பு, காரத்துடன் காவலா்கள் ஒன்று சோ்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினா். இந்த நிகழ்வு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com