தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு:தோ்வுக் கூட அனுமதி சீட்டு இணையத்தில் பதிவிறக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு இணையதளம் மூலம் தனித் தோ்வா்கள் தோ்வுக் கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்


கிருஷ்ணகிரி: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு இணையதளம் மூலம் தனித் தோ்வா்கள் தோ்வுக் கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொடக்கக் கல்வி முதலாம் ஆண்டு பட்டயத் தோ்வுகள் வரும் செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் ஆண்டு தோ்வுகள் செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் அக்டோபா் 7-ஆம் தேதி வரையும் நடைபெறுகின்றன.

இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தனித் தோ்வா்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித்தோ்வா்கள் அனைவரும் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து, தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com