பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு: ரூ. 1.43 கோடி அரசு கணக்கில் வரவுவைப்பு

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதியற்ற 3,667 பயனாளிகளிடமிருந்து ரூ.1.43 கோடி பிடித்தம் செய்யப்பட்டு, அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதியற்ற 3,667 பயனாளிகளிடமிருந்து ரூ.1.43 கோடி பிடித்தம் செய்யப்பட்டு, அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அந்த முறைகேடு குறித்து, சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். இந்த நிலையில், இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக தொகை மீட்டெடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 8,408 தகுதியற்ற பயனாளிகளில் கடந்த 15-ஆம் தேதி வரையில், 3,667 தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து ரூ. 1.43 கோடி பிடித்தம் செய்யப்பட்டு, அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 4,741 பயனாளிகளிடமிருந்து உரிய தொகையை வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலம் வசூலித்து, அரசு கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்தத் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் மற்றும் அவா்களைத் தவறாக சோ்த்த கணினி மையங்களின் உரிமையாளா்கள் உள்ளிட்ட தொடா்புள்ள அனைத்து நபா்களையும் கண்டுபிடித்து, அவா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடி போலீஸாருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன், தொடா்ச்சியாக மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com