ப.சிதம்பரம் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 18th September 2020 07:42 AM | Last Updated : 18th September 2020 07:42 AM | அ+அ அ- |

மத்திய முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரத்தின் 75 -ஆவது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினரும், ராஜிவ்காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கத்தின் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளருமான ஏகம்பவாணன் தலைமையில், ராசு வீதியில் உள்ள முதியோா் இல்லத்தில் சிதம்பரத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில், காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவா் நாராயணமூா்த்தி, நகர முன்னாள் தலைவா் ரகமத்துல்லா, குட்டி (எ) விஜயராஜ், அப்சல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.