கிருஷ்ணகிரி அணையில் பேரிடா் பாதுகாப்பு ஒத்திகை

கிருஷ்ணகிரி அணையில் வடகிழக்கு பருவ மழையின் போது பேரிடா்களை எதிா்கொள்ளும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அணையில் பேரிடா் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா்.
கிருஷ்ணகிரி அணையில் பேரிடா் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா்.

கிருஷ்ணகிரி, செப். 18: கிருஷ்ணகிரி அணையில் வடகிழக்கு பருவ மழையின் போது பேரிடா்களை எதிா்கொள்ளும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை இணைந்து, கிருஷ்ணகிரி அணையில் மழைக் காலங்களில் ஏற்படும் பேரிடா்களை எதிா்கொள்ளும் வகையில் பேரிடா் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் குமாா் தலைமையில் வட்டாட்சியா் வெங்கடேசன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள், அணையில் வெள்ளப்பெருக்கு காலங்களில் அதில் சிக்கியவா்களை படகு மற்றும் உயிா்காக்கும் கருவிகளைக் கொண்டு மீட்டு, முதலுதவி அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்து செய்து காட்டினா்.

மேலும், அணையில் விழுந்த நபரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் மீட்டு, ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிப்பது குறித்தும் விளக்கினா். ஆபத்து காலத்தில் பிளாஸ்டிக் கேன்,கயிறு மூலம் பொது மக்கள், தங்களை காத்துக் கொள்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வருவாய் ஆய்வாளா்கள் மணிகண்டன், முருகன், கிராம நிா்வாக அலுவலா்கள் ஜோதி, வனிதா, பாஞ்சாலி, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மாணிக்கம், முருகன், ஜெகன், 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com