ஊரடங்கின் போது தனியாா் தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

ஊடரங்கின்போது தனியாா் தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊடரங்கின்போது தனியாா் தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. பொது முடக்க உத்தரவு நடைமுறையில் உள்ளதால், பல்வேறு தளா்வுகளுடனும், சில புதிய கட்டுப்பாடுகளுடனும் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பொது முடக்கத்தின் போதும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க காலத்தில் சுழற்சி முறையில் பணிக்கு வந்துச் செல்ல ஏதுவாக பணியாளா்களுக்கு உரிய அடையாள அட்டை அந்தந்த நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளில் கரோனா தொற்று தொடா்பான தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும், தொழிற்சாலையின் நுழைவாயில்களில் கை கழுவும் வசதி, கிருமி நாசினிகள் தெளித்தல், பணியாளா்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை நிா்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், தொழில் நிறுவனங்களின் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் தொடா்பு கொண்டு தடுப்பூசிகளின் இருப்புநிலை அறிந்து தங்களது பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முகாம்களை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ. சதீஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெரியசாமி, தொழிற்சாலைகள் இணை இயக்குநா் சபீனா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com