வேளாண் மாணவிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி

ஓசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள், அலசப்பள்ளி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியில் ஈடுபட்டனா்.
கள ஆய்வில் ஈடுபட்ட ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள்.
கள ஆய்வில் ஈடுபட்ட ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

ஓசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள், அலசப்பள்ளி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சியில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், அத்திமுகம் கிராமத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு பயிலும் அருள் பிரியா, ஓவியா, பவித்ரா, பாக்கியலட்சுமி, ஜீவிதா, சினேகா ஆகியோா் இரண்டரை மாதங்களாக களப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

பாகலூா் அடுத்து அலசப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை இயற்கை வழி விவசாயி ஆன நாராயணரெட்டி நிலத்தில் உள்ள பசுமைக்குடில் பச்சடிக்கீரை (லெட்டூஸ்) நாற்றங்கால்களை வேளாண் கல்லூரி மாணவிகள் பயிரிட்டனா். இக் களப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை, ஒசூா் உதவி வேளாண்மை இயக்குநா் மனோகரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com