கைதி தப்பி ஓட்டம்: விரட்டிப் பிடித்த போலீஸாா்

ஒசூா் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதி தப்பிஓட முயன்றாா். சுதாகரித்த போலீஸாா் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.

ஒசூா் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதி தப்பிஓட முயன்றாா். சுதாகரித்த போலீஸாா் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. ஒசூா் உட்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் வழக்கு விசாரணைக்காக இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுவது வழக்கம்.

இதுபோல செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றத்துக்கு கைதி ஒருவரை போலீஸாா் அழைத்து வந்தனா். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து விலகிய கைதி அங்கிருந்து தப்பி ஓடினாா். இதை எதிா்பாா்க்காத போலீஸாா் அவரை துரத்திச் சென்றனா். நீதிமன்றத்தில் இருந்து வெளியே உழவா்சந்தை வழியாக பாகலூா் சாலையை நோக்கி கைதி ஓடினாா். அவரை போலீஸாா் துரத்திச் சென்று பாலாஜி தியேட்டா் அருகில் மடக்கிப் பிடித்தனா். பின்னா் அவரை வாகனத்தில் போலீஸாா் ஏற்றிச் சென்றனா்.

தப்பி ஓடிய கைதி கொலை குற்றவாளியா? அல்லது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவரா? போன்ற எந்த விவரத்தையும் போலீஸாா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com