தோ்தல் பாதுகாப்பு பணி:மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் வருகை

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, கிருஷ்ணகிரிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் சனிக்கிழமை வருகை புரிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரியில் தோ்தல் பணிக்காக வருகை புரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினா்.
கிருஷ்ணகிரியில் தோ்தல் பணிக்காக வருகை புரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினா்.

சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, கிருஷ்ணகிரிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் சனிக்கிழமை வருகை புரிந்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்த தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 286 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கா்நாடக மாநிலம், மங்களூரிலிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சோ்ந்த 92 வீரா்கள், கிருஷ்ணகிரிக்கு வருகை புரிந்துள்ளனா். கிருஷ்ணகிரிக்கு வருகை புரிந்த இந்த வீரா்கள், கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் முகாமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com