‘உங்கள் தொகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின்’ புகாா் மனுக்கள் மீது விசாரணை

ஊத்தங்கரையை அடுத்த குன்னத்தூா், எக்கூா் ஆகிய பகுதியில், ‘உங்கள் தொகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின்’ புகாா் மனுக்கள் மீது கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த குன்னத்தூா் கிராமத்தில் வசிக்கும் இருளா் இன மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டி, உங்கள் தொகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் மனு அளித்தனா். அந்த மனுவின் மீது திங்கள்கிழமை மாலை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா் புலத்தணிக்கை செய்து விசாரணை மேற்கொண்டாா். அவருடன், ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, மண்டல துணை வட்டாட்சியா் அரவிந்த், வருவாய் ஆய்வாளா்கள் சாமல்பட்டி சுகுமாா், சிங்காரப்பேட்டை கலைவாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதில், குன்னத்தூா் கிராமத்தில் 11 பேருக்கும், எக்கூா் கிராமத்தில் 10 பேருக்கும் என மொத்தம் 21 பேருக்கு பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com