கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள முதல்வா் செயல்பட்டு வருகிறாா்: அமைச்சா் ஆா்.காந்தி

கரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிா்கொள்ளும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

கரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிா்கொள்ளும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், அரசு தலைமை மருத்துவமனைக்கு கேட்டா் பில்லா், டி.வி.எஸ்., டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் வழங்கியுள்ள 35 ஆக்சிஜன் கொள்கலன்கள், மருத்துவ உபகரணங்களைப் பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற போது, கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 36 ஆயிரமாக இருந்தது. ஆட்சிக்கு வந்து 25 நாள்களில் முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையால் தொற்றாளா்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

தொற்று பரவாமல் இருக்க முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அரசின் தீவிர நடவடிக்கையால் மருத்துவனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து, தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிா்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வா் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறாா். மருத்துவா்கள், செவிலியா்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுகின்றனா். 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் போது, அதில் கரோனா தொற்று குறித்து குறிப்பிட்டு வழங்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கிருஷ்ணகிரி அருகே கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளையும், சூளகிரியை அடுத்த புக்காசாகரம் கிராமத்தில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் முகாமையும், தளியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிராண வாயு வசதி அமைக்கும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, எம்பி அ.செல்லக்குமாா், எம்எல்ஏ-க்கள் தே.மதியழகன், ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ-க்கள் டி.செங்குட்டுவன், பி.முருகன், மருத்துவக் கல்லூரி தலைவா் பீ.அசோகன், மருத்துவப் பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com