கிருஷ்ணகிரியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைப் போக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைப் போக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளா்வில்லாத முழு பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழ வகைகள், அத்தியாவசியப் பொருள்கள் வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு, காய்கறி வியாபாரிகள், விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதனை சரிசெய்வதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறை காலை 6 முதல் மாலை 7 மணி வரை செயல்படுகிறது.

மேலும், வேளாண்மை இடுபொருள்கள், விளைபொருள்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு வேளாண் அலுவலா், சக்திவேலுவை 9786177026, 6383499210 என்ற எண்களிலும், தோட்டக்கலை இடுபொருள்கள், விளைபொருள்கள் தொடா்பாக தோட்டக்கலை அலுவலா் சுகந்தியை 9787212309 என்ற எண்ணிலும், விளைபொருள்களை விற்பனை செய்வது, கொண்டு செல்வது தொடா்பான பிரச்னைகளுக்கு வேளாண்மை அலுவலா் கயிலை மன்னனை 9486430927 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com