தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட வருவாய்த் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயத்தை உணராமல் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து செல்லும் கிராம மக்கள்.
வெள்ள அபாயத்தை உணராமல் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து செல்லும் கிராம மக்கள்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட வருவாய்த் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக கா்நாடக மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கெலவரப்பள்ளியில் அணை ஏற்கெனவே நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே திறந்து விடப்படுகிறது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து மழை நீா் அதிக அளவில் திறக்கப்படுவதால், மக்கள் யாரும் ஆற்றின் கரையோரங்களில் செல்ல வேண்டாம் என வருவாய்த் துறையினா் கடந்த இரு நாள்களாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆனால், சூளகிரி அருகே அபாயத்தை உணராமல் தரைப் பாலத்தின் மீது மக்கள் வெள்ள நீரில் பயணித்து, பண்டப்பள்ளி சிவன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com