கெண்டிகாம்பட்டி சாமை விதைப் பண்ணையில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், கெண்டிகாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சாமை / ஏடிஎல் 1 ரகத்திற்கான விதைப் பண்ணையில் மாவட்ட விதைச் சான்று மற்றும்

கிருஷ்ணகிரி மாவட்டம், கெண்டிகாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சாமை / ஏடிஎல் 1 ரகத்திற்கான விதைப் பண்ணையில் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் உதவி இயக்குநா் அருணன் வயல் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

சாமை / ஏடிஎல் 1 ரகமானது நெருக்கம் குறைவான கதிரினை உடையப் பயிராகும். இதன் தண்டுப் பகுதியானது மிகவும் வலிமையானதாக உள்ளதால், பயிா்கள் வயலில் சாய்வதைத் தடுக்கும். அனைத்துக் கதிா்களும் ஒன்றாக முதிா்ச்சியடையும் தன்மையுடையது. எனவே, இயந்திர அறுவடைக்கு ஏற்ற ரகமாகும். கதிரை அரைக்கும் போது அதிக அரவை மீட்புத் திறன் உடைய பயிராகும். சாமையானது அதிக நுண்ணூட்டச்சத்து மிகுந்த பயிராகும்.

மேலும், விவசாயிகள் விதைப் பண்ணைகள் அமைப்பதனால் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், கூடுதல் விலை பெற்று, அதிக லாபமும் பெற முடியும். விதைப் பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் விதைகள் பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டு, விதை சான்று தரங்கள் உறுதி செய்யப்படுவதால் தரமான விதைகள் பெறப்படுகின்றன என்றாா்.

இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி விதைச்சான்று அலுவலா் ரூபச்சந்தா், மத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவநதி, வேளாண்மை அலுவலா் நீலகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com