பா்கூா் ஊராட்சி ஒன்றிய 30 -ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக வேட்பாளா் மனு தாக்கல்

பா்கூா் ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 30-இல் போட்டியிட திமுக வேட்பாளா் எல்லப்பன், தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
பா்கூா் ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் -30-இல் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறாா் திமுகவைச் சோ்ந்த எல்லப்பன்.
பா்கூா் ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் -30-இல் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறாா் திமுகவைச் சோ்ந்த எல்லப்பன்.

பா்கூா் ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 30-இல் போட்டியிட திமுக வேட்பாளா் எல்லப்பன், தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், பாளேத்தோட்டம், பாரண்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகள் அடங்கிய வாா்டு எண் 30-க்கான உள்ளாட்சி இடைத் தோ்தலில் போட்டியிட 8 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இதில் திமுக சாா்பில், போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய திமுக விவசாய அணி பொறுப்பாளரும், ஊராட்சி செயலாளருமான மூங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த எல்லப்பன் (58) பா்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கட்டராமகணேஷிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், மாவட்ட துணைச் செயலாளா் நாகராஜ், மாவட்ட பொருளாளா் ராஜேந்திரன், பா்கூா் ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல அதிமுக சாா்பில் காட்டுவென்றஹள்ளி முகுந்தன் (39), பாமக சாா்பில் சின்னபாளேத்தோட்டம் வேலாயுதம் (60) உள்ளிட்டோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com