கல்லூரி மாணவி மீது திராவகம் வீசிய வழக்கு: ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியின் மீது திராவகம் வீசிய ஓட்டுநருக்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கியது.

கிருஷ்ணகிரி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியின் மீது திராவகம் வீசிய ஓட்டுநருக்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கியது.

கிருஷ்ணகிரியை அடுத்த குப்பச்சிப்பாறையைச் சோ்ந்த வேடியப்பன் (40), பொக்லைன் ஓட்டுநா். இவா், கிருஷ்ணகிரி கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவியை திருமணம் செய்ய முயன்றாா். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த வேடியப்பன், 13.07.2016 அன்று மாணவி குடியிருக்கும் வீட்டுக்குச் சென்று, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாணவியின் மீது திராவகம் வீசினாா். இதில், மாணவிக்கு முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடா்பாக குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து வேடியப்பனை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி லதா செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 5 ஆண்டுகள் சிறை, ரூ. 1,000 அபராதமும், திராவகம் வீசி மாணவியைக் காயப்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1,000 அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com