நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னையில் கருத்தலை புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குறைகளை வலியுறுத்தினா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரங்கள், பூச்சிமருந்துகள், விதைகள் தேவையான அளவு இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு கருத்தலை புழு பிரச்னைக்குத் தீா்வு காண ஒட்டுண்ணி விடுதல், வேம்பு சாா்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்தல் போன்ற தொழில்நுட்பங்கள், அதற்கான உதவிகளை விவசாயிகள் செய்ய வேண்டும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கிருஷ்ணமூா்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநா் ராம்பிரசாத், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com