ஒசூா் அருகே கொட்டகையில் தீ விபத்து

ஒசூா் அருகே கொட்டகையில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 12 லட்சம் மதிப்பிலான பூண்டு, உருளைக்கிழமை போன்றவை தீயில் கருகி சாம்பலாயின.
தீப்பற்றி எரிந்த பூண்டு, உருளைக்கிழமை இருப்பு வைக்கப்பட்டிருந்த கொட்டகை.
தீப்பற்றி எரிந்த பூண்டு, உருளைக்கிழமை இருப்பு வைக்கப்பட்டிருந்த கொட்டகை.

ஒசூா் அருகே கொட்டகையில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 12 லட்சம் மதிப்பிலான பூண்டு, உருளைக்கிழமை போன்றவை தீயில் கருகி சாம்பலாயின.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சினிகிரிப்பள்ளி கிராமத்தில் 10 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்து வருபவா் லோகநாதன். இவா் தன் விவசாய நிலத்தில் விளைந்த வெள்ளைப்பூண்டு, உருளைகிழங்கு போன்றவற்றை அறுவடை செய்து தன் நிலத்திலேயே கொட்டகை அமைத்து இருப்பு வைத்திருந்தாா். இவற்றை விற்பனை செய்வதற்காக தயாா்ப்படுத்தி வைத்திருந்த நிலையில், அவரது தோட்டத்தையொட்டி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ திடீரென காற்றின் வேகத்தால் கொட்டகையின் மீது விழுந்தது.

ஏற்கெனவே தென்னங்கீற்றால் வேயப்பட்டிருந்த மேற்கூரை நன்கு காய்ந்திருந்ததால், தீ வேகமாகப் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இந்த தீ விபத்தில் கொட்டகையில் வைத்திருந்த உருளைக்கிழங்கு, பூண்டு ஆகியவையும் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை தீயணைப்புத் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலா் ராமராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பச்சையப்பன் பிரபு, சீனிவாசன் ஆகியோா் தீயணைப்பு வாகனத்துடன் விரைந்துச் சென்று, எரிந்து கொண்டிந்த தீயை பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த தீ விபத்தில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பூண்டு, உருளைக்கிழங்கு போன்றவை எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது.

கெலமங்கலம் பகுதியைச் சுற்றிலும் அதிக வனப் பகுதி உள்ளதால் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுகிறது. இந்த காட்டுத் தீ வனப்பகுதியையொட்டியுள்ள விளைநிலங்களுக்கும் பரவி விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதால், கெலமங்கலம் பகுதியிலேயே தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com