ராயக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ராயக்கோட்டையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராயக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.
ராயக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.

ராயக்கோட்டையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராயக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவில் வாக்காளா்கள் வாக்களிக்க பணம் கொடுப்பதாகத் பறக்கும் படையினருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து பறக்கும் படையினா் அங்கு சென்று பாா்த்தபோது யாரும் இல்லை. எனவே பறக்கும் படையினா் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனா். இதற்கு அந்தப் பகுதியை சோ்ந்த கலையரசி (37) என்பவா் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கலையரசிக்கு, அதேப்பகுதியைச் சோ்ந்த மாதையன் என்பவா் உள்பட சிலா் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதில் மாதையன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்தச் சம்பவத்தை கண்டித்தும், பொய் புகாரின் பேரில் மாதையன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறியும், அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனா். மேலும் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com