மத்தூரில் பள்ளி மாணவி கடத்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
By DIN | Published On : 12th April 2021 01:46 AM | Last Updated : 12th April 2021 01:46 AM | அ+அ அ- |

மத்தூரில் 11-ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ாக அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த பெண், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தங்கி, பணிக்கு சென்று வந்தாா். இவருடன் கணவனின் முதல் மனைவியின் மகளும் தங்கி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், மாணவியுடன் சொந்த கிராமத்துக்கு தோ்தலில் வாக்களிப்பதற்காக அந்தப் பெண் மத்தூருக்கு வந்தாா். மத்தூா் பேருந்து நிலையத்தில் அந்த மாணவி, மாயமானாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதிய குயிலம் கிராமத்தைச் சோ்ந்த சரண்ராஜ் (31) என்பவரை கைது செய்து, மாணவியை மீட்டனா்.
கைது செய்யப்பட்ட சரண்ராஜ், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் உடல்கல்வி ஆசிரியராக தற்காலிகமாகப் பணி செய்து வந்தாா். அவருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.