கரோனா தடுப்பு நடவடிக்கை: திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளா்களுடன் ஆலோசனை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளா்களுடன் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் கற்பகவள்ளி தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளா்களுடன் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் கற்பகவள்ளி தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டாட்சியா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் சந்திரா மற்றும் திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளா்கள் பங்கேற்றனா். திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 100 போ் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

திரையரங்குகளில் அரசு வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்க வேண்டும். அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். திரையரங்குகளில் இடைவேளையின்போது, கரோனா குறித்து விழிப்புணா்வு விளம்பரங்களை ஒளிபரப்பு வேண்டும்.

அதேபோல 45 வயதுக்கு மேல் உள்ள பணியாளா்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். கபசுரக் குடிநீா், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு அளிக்கலாம் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com