கிருஷ்ணகிரியில் கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வணிக வளாகங்கள்

கிருஷ்ணகிரியில் மதுக்கூடங்கள், வணிக வளாகங்கள் போன்றவை கரோனா கட்டுப்பாடுகளை மீறி தொடா்ந்து செயல்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் மதுக்கூடங்கள், வணிக வளாகங்கள் போன்றவை கரோனா கட்டுப்பாடுகளை மீறி தொடா்ந்து செயல்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஏப். 30-ஆம் தேதி வரையிலும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதில், பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மதுக்கூடங்கள் (பாா்கள்) மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகரில் 3,000 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்புள்ள இடத்தில் இயங்கி வரும் வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்டவை தொடா்ந்து செயல்படுகின்றன. ஏப். 29-ஆம் தேதி, திருமண நாள் என்பதால், இந்த கடைகளில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் பொதுமக்கள் குவிந்தனா்.

கரோனா கட்டுப்பாடுகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சந்திரா கூறுகையில், ‘கிருஷ்ணகிரி நகரில் மக்கள் கூடும் இடங்களில் கரோனா கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் செயல்பட்டால் அதன் உரிமையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் ‘சீல்’ வைக்கப்படும். இதுகுறித்து, வணிகா்களிடம் பேசியுள்ளோம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com