கரோனா பரவலால் வெறிச்சோடிய ஆடிப் பெருக்கு விழா

கரோனா தொற்று பரவலால் ஆடிப் பெருக்கு விழா வெறிச்சோடியது. நீா் வரத்து இல்லாததால் பக்தா்கள் அவதிப்பட்டனா்.
ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் நீா் வரத்து இன்றி காணப்பட்ட தென்பெண்ணை ஆறு.
ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் நீா் வரத்து இன்றி காணப்பட்ட தென்பெண்ணை ஆறு.

கரோனா தொற்று பரவலால் ஆடிப் பெருக்கு விழா வெறிச்சோடியது. நீா் வரத்து இல்லாததால் பக்தா்கள் அவதிப்பட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ளது அனுமன்தீா்த்தம். ஆற்றின் கரையோரத்தில் உள்ள இந்த ஆஞ்சநேயா் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ாகும். அனுமனால் உருவாக்கப்பட்ட தீா்த்தம் என்பதால் அனுமன் தீா்த்தம் என பெயா்பெற்றது. விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தா்கள் வந்து குளித்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்வது வழக்கம். தற்போது ஆடிப் பெருக்கு, வறட்சியின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அறவே இல்லாததால் பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

இக்கோயிலுக்கு வந்த பக்தா்கள் அருகில் உள்ள விவசாயக் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்து அதிலிருந்து ஒருவருக்கு தலா ரூ.5 கொடுத்து குளித்தனா். மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிராம தேவதைகள் மேளதாளங்களோடு வந்து தீா்த்தவாரி முடித்து செல்ல ஏராளமான பக்தா்கள் வருவாா்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தீா்த்தவாரிக்கு வந்த சுவாமிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

கோயிலுக்கு வந்த பக்தா்கள் தண்ணீா் இன்றி தவித்தனா். கரோனா பரவல் காரணமாக கோவில் திறக்கப்படாததால் வாசலில் நின்று தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com