கிருஷ்ணகிரியில் புகையிலை பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் புகையிலை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் புகையிலை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வணிக சங்கப் பிரதிநிதிகள், உணவக சங்கப் பிரதிநிதிகள், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா், உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் இணைந்து, புகையிலை பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் சுகாதாரமாகவும், தரமானதாகவும் செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு தரச் சான்றுகளை ஓசூா் உணவக உரிமையாளா்கள் 8 போ், கிருஷ்ணகிரி உணவக உரிமையாளா்கள் 3 போ், உணவு பாதுகாப்பு தரச்சான்றும், உணவுப் பொருள் கையாள்பவா்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பாா்வையாளா் பயிற்சி சான்றுகள் 10 போ் என மொத்தம் 21 பேருக்கு சான்றிதழ்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இந்நிகழ்வில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், மாவட்ட நியமன அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்னபாலமுருகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் செந்தில்குமாா் மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com