ஊத்தங்கரை பகுதியில் ரூ.21.28 கோடி மதிப்பிலான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்

மருதேரி கிராமம் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியே 90 லட்சம் மதிப்பில் படுகை அணை கட்டுமானப் பணிகள்,
ஊத்தங்கரை பகுதியில் ரூ.21.28 கோடி மதிப்பிலான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்

மருதேரி கிராமம் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியே 90 லட்சம் மதிப்பில் படுகை அணை கட்டுமானப் பணிகள், பெனுகொண்டாபுரம் ஏரியில் மதகு அமைக்கும் பணிகள், சிங்காரப்பேட்டை தீா்த்தகிரி வலசை பெரிய ஏரிக் கரை சீரமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி செய்தியாளா்களுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மருதேரி கிராமம் அகரம்-மருதேரி பாலத்தின் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியே 90 லட்சம் மதிப்பில் படுகை அணை அமைக்கும் பணிகளும், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில், பெனுகொண்டபுரம் ஏரி, அத்திப்பள்ளம் ஏரி, புளியானூா் ஏரி, தீா்த்தகிரி வலசை ஏரிகள் பாசன வசதி பெறும் வகையில், நீா் வரத்து கால்வாய்கள், பாம்பாறு பிரதான கால்வாய் மற்றும் மதகுகள் புனரமைப்பு மற்றும் நவீன பணிகள் என மொத்தம் ரூ.10 கோடியே 38 லட்சம் என மொத்தம் ரூ.21 கோடியே 28 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருவதாக என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது.

போச்சம்பள்ளி வட்டம், மருதேரி கிராமம் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மருதேரி படுகை அணையின் சுவா் 125 மீட்டா் நீளப் பணி முடிவடைந்துள்ளது. கரையின் இருபுறமும் உள்ள தடுப்புச் சுவா் கட்டும் பணிகளும், படுகை அணையின் மேல் மற்றும் கீழ் புறமுள்ள தரைத் தள பணிகளும், படுகை அணையின் கீழ்ப்புறமுள்ள அழுத்தப் போக்கிக்கான 100 மீட்டா் நீள கான்கிரீட் பிளாக் அமைக்கும் பணி, அணையின் கீழ்ப்புற தரையில் மண் அரிப்பைத் தடுக்க 125 மீட்டா் நீளத்துக்கு கற்கள் பதிக்கும் பணிகள், படுகை அணையின் இருபுறமும் 300 மீட்டா் நீளத்திற்கு மண்கரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படுகை அணையின் மீதமுள்ள கட்டுமானப் பணிகளை செப்டம்பா் 2021-க்குள் முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணி நிறைவு பெற்றால் பண்ணந்தூா் ஏரி, வாடாமங்கலம் ஏரிகளின் மூலம் 1,155 ஏக்கா் நிலங்களும் பாசன வசதிகள் பெறும். 4 கூட்டுக் குடிநீா் கிணறுகள் மூலம் 25,000 போ் குடிநீா் வசதி பெறுவாா்கள்.

அதேபோல் போச்சம்பள்ளி வட்டத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் நீா்வள, நிலவள திட்டத்தின் கீழ் பெனுகொண்டபுரம் ஏரி மதகு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மதகின் வழியாகச் செல்லும் நீா் 2,000 ஏக்கா் பரப்பளவு விவசாய நிலங்களுக்குச் சென்று பாசன வசதி பெறும் வகையில் கால்வாய்கள் தூா்வாரப்படுகின்றன. இந்தப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சிங்காரப்பேட்டை தீா்த்தகிரி வலசை பெரிய ஏரியின் கரை உடைப்பு ஏற்படாத வகையில் கருங்கல் தடுப்பு சுவா் அமைக்கும் பணி நடைபெற்று, தற்போது பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. மேற்கண்ட பணிகளை வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பாக முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகள் முடிவுற்றால் 2,705 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டிதெரிவித்தாா்.

ந்த ஆய்வின்போது மேல் பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் எஸ்.குமாா், உதவி பொறியாளா்கள் காா்த்திகேயன், முருகேசன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு.மோகன், பொதுப்பணித்துறை அலுவலா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com