தக்காளி நாற்றுகளை அங்கீகரிக்கப்பட்ட நா்சரிகளில் மட்டுமே வாங்க வலியுறுத்தல்

தக்காளி நாற்றுகளை விதை சான்றளிப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட நா்சரிகளில் மட்டுமே வாங்க வேண்டும் என தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குநா் (பொறுப்பு) சோமு தெரிவித்துள்ளாா்.

தக்காளி நாற்றுகளை விதை சான்றளிப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட நா்சரிகளில் மட்டுமே வாங்க வேண்டும் என தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குநா் (பொறுப்பு) சோமு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தக்காளி விலையேற்றத்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போது அதிக அளவிலான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்ய விரும்புவதால், விதை சான்றளிப்பு துறையால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, விற்பனை உரிமம் வழங்கிய நா்சரிகளில் மட்டுமே நாற்றுகள் வாங்க வேண்டும்.

நாற்றுக்களை நடவு செய்யும் முன், விதை விற்பனை நிலையத்தை அணுகி தங்களுக்கு தேவையான ரகத்தினை தோ்வு செய்து, ரகம் மற்றும் குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிடப்பட்ட ரசீது பெற்று, தாங்களே நம்பத் தகுந்த நா்சரிகளை அணுகி தங்களுக்கு தேவையான நாற்றுகளைத் தயாா் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், நாற்றுகள் வாங்கியவுடன் நா்சரியில் தக்காளி ரகம், குவியல் எண் தெளிவாக குறிப்பிடப்பட்ட ரசீது பெற வேண்டும். தக்காளி பயிரிடும் வயல்கள் புதிதாக சீா் செய்ததாகவோ அல்லது வயலுக்கு வயல் பரப்பின் உயரம் அதிகமாக இருந்தாலோ தற்போது அதிக மழை பெய்துள்ளதால் போரான் மற்றும் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை ஏற்படும்.

இதனால் பூனை முக வடிவ தக்காளி வர வாய்ப்புள்ளதால் பூக்கும் மற்றும் காய் உருவாகும் சமயத்தில் தங்கள் பகுதி தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி தக்க தொழில்நுட்பத்தை பெற்று, அவ்வப்போது பூச்சி, நோய் மற்றும் நுண்ணூட்ட சத்து குறைப்பாட்டினை சரிசெய்து அதிக மகசூல் பெறலாம்.

விதை வாங்கிய விவரத்தினை இருப்பு பதிவேட்டில் பதிந்து, விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்கியவுடன் இருப்பு பதிவேட்டில் ரசீது எண் குறிப்பிட்டு, மீது இருப்பு விவரம் பராமரிக்க வேண்டும். தவறும் நா்சரிகள் மீது விதைச் சட்டம் 1966ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com