இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஒசூரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஒசூரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஒசூா் - தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் (டிச. 31) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட அவைத்தலைவா் அ.யுவராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. உறுப்பினா் சோ்க்கை, உள்ளாட்சித் தோ்தல், கட்சி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்க உள்ள இக்கூட்டத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிப்பா்.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, மாநகர, பேரூா் கழக செயலாளா்கள், நிா்வாகிகள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூா் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வாா்டு செயலாளா்கள், கழக தோழா்கள் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com