ஒசூா் அருகே 3 போ் தற்கொலை: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 06th February 2021 07:54 AM | Last Updated : 06th February 2021 07:54 AM | அ+அ அ- |

ஒசூா் அருகே வெவ்வேறு பிரச்னைகள் காரணமாக 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
ஒசூா், ராமநாயக்கன் ஏரி பூங்கா பகுதியில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, ஒசூா், சினன எலசகிரி, முல்லைவேந்தன் நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜா (55) உடல்நலக் குறைவு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஒசூா், சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
முதியவா் தற்கொலை: பாகலூா் அருகே உள்ள பேரிகை ஊராட்சி கா்னப்பள்ளியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா் நாராயணப்பா (60) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.