கிருஷ்ணகிரியில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புறநகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடேசன், சந்திரசேகரன், நாராயணன் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா். கல்லுாரி பேராசிரியா் சங்க மாநில பொருப்பாளா் சிவப்பிரியா, வணிகவரி பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆனந்தன், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்க நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பல்வேறு துறைகளில் ஒப்பந்த முறையில் பணியமா்த்தப்பட்ட ஊழியா்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். கரோனாவைக் காரணம் காட்டி பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்க வேண்டும். அரசுத் துறையில் உள்ள, 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளா்களின், 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com