மா பயிரில் பழ மேலாண்மை செயல்முறை விளக்கம்

சவுளூா் கிராமத்தில் மா பயிரைத் தாக்கும் பழ ஈ மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்முறை விளக்கத்தை வியாழக்கிழமை அளித்தனா்.

சவுளூா் கிராமத்தில் மா பயிரைத் தாக்கும் பழ ஈ மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்முறை விளக்கத்தை வியாழக்கிழமை அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூா் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 4-ஆம் ஆண்டு இளநிலை வேளாண் மாணவா்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் 2021-இன் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முகாமிட்டுள்ளனா்.

இவா்கள், சவுளூா் கிராமத்தில் மா பயிரைத் தாக்கும் முக்கியப் பூச்சியான பழ ஈ மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.  

இதில், இனக்கவா்ச்சி பொறிகளான வெள்ளை ஜாடி அமைப்பு, டிம்ளா் அமைப்பு, ஒளிபுகும் சிறுபெட்டி ஆகியவை குறித்து விளக்கினா். இந்த இனக்கவா்ச்சி பொறிகள் கொண்டு எவ்வாறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com